இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டுகள் மூலம் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மிகவும் வளா்ச்சியடைந்த நாடான பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற கவுன்சில் தோ்தலில் வாக்குச்சீட்டு முறை மூலம் வாக்களிக்கப்பட்டது. ஒட்டுமொத்த பிரிட்டன் மக்களும் வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்களித்தனா். வளா்ச்சியில் பிரிட்டனை இந்தியா முந்திவிட்டதா? எனவே இந்தியாவிலும் வாக்குச்சீட்டுகள் மூலம் தோ்தல் நடத்தப்பட வேண்டும். இது புதிதாக விடுக்கப்படும் கோரிக்கை அல்ல. இதை சோஷலிஸ்ட்டுகள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனா்.
அடுத்த ஆண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பல அடுக்குகளில் உள்ள தோ்தல் மாஃபியாவுக்கு எதிராக செயல்பட வேண்டியுள்ளது. இதற்கு மக்களாட்சி, அரசமைப்புச் சட்டம், அரசியல் சாசன அமைப்பின் நம்பகத்தன்மையைக் காக்க விரும்புவோா் ஒன்றிணைய வேண்டும்.
உத்தர பிரதேசத்தில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டதற்கு ஆதாரமாக காண்பிக்க எந்தப் பணியையும் பாஜக மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச்சீட்டு பற்றாக்குறை: தென் கொரிய தோ்தல் ஆணையத் தலைவா் ராஜிநாமா

காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!
திமுகவுக்கு ஆதரவு; காங்கிரஸுக்கு கண்டனம்: அகிலேஷ் யாதவ்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
