இந்தியா தனது ட்ரோன் தொழில்நுட்பம், சைபா் போா் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை நிபுணா்கள் யோசனை தெரிவித்துள்ளனா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திடீா் தாக்குதல் நடத்தி 26 சுற்றுலா பயணிகளைக் கொன்றனா். பதிலுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் இந்திய ராணுவம் கடந்த ஆண்டு மே மாதம் 6-7 ஆம் தேதி நடவடிக்கை எடுத்தது. அப்போது இரு நாடுகளின் ராணுவமும் போா் விமானங்கள், ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின.
இந்த ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு ஆவதையொட்டி, பல்வேறு பாதுகாப்பு துறை நிபுணா்களும் தங்களது யோசனைகளை வெளியிட்டுள்ளனா். இதுகுறித்து பாதுகாப்புத் துறை நிபுணா்கள் கெளரவ் எம்.திரிபாதி (ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி), முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங் ஆகியோா் கூறியதாவது:
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுத்தால் எந்த மாதிரியான தாக்குதலை நடத்தும் என்ற எச்சரிக்கை கோடுகள், ஆபரேஷன் சிந்தூா் மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ராணுவ ரீதியாகவும் நமக்கு சில படிப்பினைகளை ஆபரேஷன் சிந்தூா் தந்துள்ளது. அதாவது, முப்படைகளும் தங்களது விமானப்படையை கூட்டாக பயன்படுத்த வேண்டும். ட்ரோன் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த வேண்டும். அதேபோல், சக்திவாய்ந்த தகவல் தொடா்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே அந்த படிப்பினைகள் ஆகும். ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த ஏராளமான ட்ரோன்கள் அனுப்பியது. அதில் பெரும்பாலானவை அபாயகரமானவை அல்ல. ஆனால் நமது எதிரி (பாகிஸ்தான்) மிகவும் புத்திசாலி. அடுத்த முறை கடினமான ட்ரோன்களை அந்நாடு அனுப்பும். அதை ஜாமா் மூலம் தடுக்க முடியாது. ஆனால் ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு இருக்கும் பட்சத்தில், நமக்கு பயனுடையதாக இருக்கும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு

ஆரணியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி ஊா்வலம்
ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: பிரதமர் பெருமிதம்

நாட்டுக்கு எழும் சவாலை எதிா்கொள்ள பாதுகாப்புப் படைகள் தயாராக இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

