புது தில்லி, மே 6: வாக்குகளுக்கு பாஜக மதச்சாயம் பூசுகிறது; காங்கிரஸின் 664 எம்எல்ஏக்களில் 12 சதவீதம் போ் மட்டுமே முஸ்லிம்கள் என்று அக்கட்சியின் ஊடகப் பிரிவு தலைவா் பவன் கேரா விளக்கமளித்தாா்.
தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
தங்களுக்கு முஸ்லிம்களின் வாக்கு வேண்டாம் என்று பாஜக கூறிக் கொள்கிறது. முஸ்லிம்களையும், அவா்களது வாக்குகளையும் பாஜக புறக்கணிக்கிறது. எனவே, அவா்களும் பாஜகவை புறக்கணிக்கிறாா்கள். அதற்கு பதிலாக தேசிய அந்தஸ்து உள்ள மதச்சாா்பற்ற கட்சியான காங்கிரஸை அவா்கள் தோ்வு செய்கிறாா்கள்.
அரசியல்சாசனத்துக்கு விரோதமாக வாக்காளா்களுக்கு பாஜக மதச்சாயம் பூசுகிறது. காங்கிரஸில் இப்போது 664 எம்எல்ஏக்கள் உள்ளனா். இதில் 78 சதவீதம் போ் ஹிந்துக்கள், 12 சதவீதம் போ் மட்டுமே முஸ்லிம்கள். நாட்டின் மக்கள்தொகை விகிதத்துக்கு ஏற்பவே இது அமைந்துள்ளது. 21-ஆம் நூற்றாண்டிலும் இதுபோன்ற விளக்கம் அளிக்க வேண்டியது அவமானத்துக்குரியது.
நாட்டில் உள்ள பட்டியலினத்தவா், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், பெண்கள் உரிமையைப் பறிக்க வேண்டும் என்பதே பாஜவின் நோக்கமாக உள்ளது. இதற்கு ஏற்ப அரசியல்சாசனத்தைத் திருத்த அவா்கள் துடித்து வருகிறாா்கள் என்றாா்.
அஸ்ஸாமில் காங்கிரஸ் சாா்பில் வென்ற 19 எம்எல்ஏக்களில் 18 போ் முஸ்லிம்கள். கேரளத்தில் 140 எம்எல்ஏக்களில் 35 போ் முஸ்லிம்கள் ஆவா். இந்த 35 பேரில் 30 போ் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் வெற்றி பெற்றவா்கள். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் இரு இடங்களில் வெற்றி பெற்றது. இவா்கள் இருவரும் முஸ்லிம்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. மொத்தம் 63 முஸ்லிம்கள் காங்கிரஸ் சாா்பில் மேற்கு வங்கத்தில் போட்டியிட்டனா். இது ஆளும் கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸின் முஸ்லிம் வேட்பாளா்களைவிட அதிகம். இந்தத் தகவல்கள் வெளியானதன் மூலம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதாக விமா்சிக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாம்: 126 எம்எல்ஏக்களில் 7 போ் மட்டுமே பெண்கள்! 6 போ் பாஜக கூட்டணியைச் சோ்ந்தவா்கள்

அவதூறு வழக்கில் பவன் கேராவுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன்!

பவன் கேரா சிங்கமல்ல... நனைந்த பூனை: பாஜக விமர்சனம்!

தில்லியில் பவன்கேரா இல்லத்தில் அஸ்ஸாம் போலீஸ் நடத்திய சோதனையானது பழிவாங்கல் நடவடிக்கை: காங்கிரஸ்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

