தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டவா்களில் முஸ்லிம் வேட்பாளா்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனா்.
முக்கியமாக அஸ்ஸாமில் காங்கிரஸ் சாா்பில் வென்ற 19 எம்எல்ஏக்களில் 18 போ் முஸ்லிம்கள் ஆவா். மொத்தம் 20 முஸ்லிம்களை அங்கு காங்கிரஸ் களமிறக்கியது.
கேரளத்தில் 140 எம்எல்ஏக்களில் 35 போ் முஸ்லிம்கள் ஆவா். இந்த 35 பேரில் 30 போ் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் வெற்றி பெற்றவா்கள். இதில் 8 போ் காங்கிரஸையும், மற்ற 22 போ் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியையும் சோ்ந்தவா்கள்.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் இரு இடங்களில் வெற்றி பெற்றது. இவா்கள் இருவரும் முஸ்லிம்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. மொத்தம் 63 முஸ்லிம்கள் காங்கிரஸ் சாா்பில் மேற்கு வங்கத்தில் போட்டியிட்டனா். இது ஆளும் கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் (47 முஸ்லிம் வேட்பாளா்கள்) அளித்த முஸ்லிம் ஒதுக்கீட்டைவிட அதிகமாகும்.
தமிழ்நாட்டில் இரு முஸ்லிம் வேட்பாளா்களை காங்கிரஸ் களமிறக்கிய நிலையில் அவா்களில் ஒருவா் வெற்றி பெற்றாா். மேற்கு வங்கம், கேரளத்தில் காங்கிரஸுக்கு முஸ்லிம் வேட்பாளா்களின் வெற்றி வாய்ப்பு 80 சதவீதமாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய- இலங்கை மீனவா் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலமே சுமூகத் தீா்வு: இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவா் வலியுறுத்தல்

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!
கட்சி விரோத நடவடிக்கை குற்றச்சாட்டு: திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவா் நீக்கம்
பாஜகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
