விமான எரிபொருள் விலை உயர்வால் விமான சேவைகளைக் குறைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், விமான எரிபொருளின் விலையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதனால், இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, தனது சேவைகளில் தினசரி 100 விமானங்களை ஜூன் மாதம் முதல் குறைக்க முடிவு செய்துள்ளது. ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற சர்வதேச இடங்களுக்கான விமான சேவைகள் அதிக அளவில் குறைப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது, தற்போது தினசரி 1,100 விமானங்களை இயக்கி வரும் ஏர் இந்தியாவின் சேவைகளில் 10 சதவிகிதமாகும்.
விமான நிறுவனங்களின் இயக்கச் செலவில் எரிபொருள் பங்கீடு செலவும் மட்டும் சுமார் 40 சதவிகிதமாக இருக்கும்நிலையில், எரிபொருள் மீதான சிறிய விலை உயர்வும் நிறுவனத்தின் லாபத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏற்கெனவே, பாகிஸ்தான் வான்வெளி மூடல் காரணமாக, ஐரோப்பா, வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் சுற்று பாதையில் செல்ல வேண்டிய நிலை எரிபொருள் செலவை மேலும் அதிகரிக்கிறது.
Summary
Air India may cut 100 flights daily as jet fuel prices hit
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!
ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!

தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானத்தால் பயணிகள் அவதி!

இண்டிகோ நிறுவனத்துக்கு முதன்மை வியூக அலுவலர் நியமனம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

