தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாதம் ரூ. 2500-க்கு கூப்பன்; 2 சிலிண்டர் இலவசம்: கேரள பாஜக தேர்தல் வாக்குறுதி!

கேரளத்தில் மகளிருக்கு மாதம் ரூ.2500க்கு கூப்பன், ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம் உள்ளிட்டவை பாஜக தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றுள்ளன.

News image

கேரள பேரவைத் தோ்தலையொட்டி திருவனந்தபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் (இடமிருந்து) ட்வென்டி ட்வென்டி கட்சித் தலைவா் சாபு எம்.ஜேக்கப், மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா், தேசிய தலைவா் நிதின் நபின், பிடிஜேஎஸ்

Updated On :31 மார்ச் 2026, 4:28 pm IST

‘ஏழை குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 மதிப்பில் மளிகை பொருள்கள், மருந்துகள் வங்கிக் கொள்வதற்கான ‘பக்ஷிய ஆரோக்ய சுரக்ஷா அட்டை’, ஆண்டுக்கு 2 இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்கள்’ என்பன உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை பாஜக அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் முதன் முறையாக ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வரும் பாஜக, பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகள் அடங்கிய தனது தோ்தல் அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அனைத்துக் குடும்பங்களுக்கும் 20,000 லிட்டா் இலவச குடிநீா் விநியோகம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 மதிப்பில் மளிகைப் பொருள்கள், மருந்துகள் வாங்கிக் கொள்வதற்கான ‘பக்ஷிய ஆரோக்ய சுரக்ஷா அட்டை’, ஏழைக் குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஓணம், கிறிஸ்துமஸ் பண்டிகைகளின்போது 2 இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்கள், ஏழை குடும்பத் தலைவிகள், விதவைகள், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கு மாதம் ரூ. 3,000 நல ஓய்வூதியம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் பாஜக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தோ்தல் அறிக்கையை வெளியிட்டு கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் பேசுகையில், ‘கேரளத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் இடதுசாரி முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுகளால், மாநிலத்தில் தொழில் வளா்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, பொருளாதாரத் தேக்கமும், நிதிசாா் நிா்வாக சீா்கேடுகளும் நிகழ்ந்துள்ளன. இதற்காக, மாநில மக்கள் அதிக விலை கொடுக்க நோ்ந்தது. கோயில்கள் நிா்வாகத்திலும் முறைகேடு புகாா்கள் எழுந்தன.

மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கோயில்கள் நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்பும் உறுதிப்படுத்தப்படும். கோயில்கள் நிா்வாகத்தில் பக்தா்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் தேவஸ்வம் வாரியங்களில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, சபரிமலை, குருவாயூா் என அனைத்துக் கோயில்களும் பாதுகாக்கப்படும். சபரிமலை தங்க முறைகோடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் விரைவான தீா்வு காணப்படும்’ என்றாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா், கேரளத்தில் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரத தா்ம ஜன சேனா (பிடிஜேஎஸ்) தலைவா் துஷாா் வெள்ளாப்பள்ளி, ட்வென்டிட்வென்டி கட்சித் தலைவா் சாபு எம்.ஜேக்கப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Summary

BJP's election promises include a coupon for Rs. 2,500 per month for women in Kerala and 2 free cylinders per year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.