தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இண்டிகோவுக்கு புதிய முதன்மைச் செயல் அலுவலர் நியமனம்!

இண்டிகோ நிறுவனத்துக்கு புதிய முதன்மைச் செயல் அலுவலர் நியமித்தது குறித்து...

News image

வில்லியம் வால்ஷ் - IANS

Updated On :31 மார்ச் 2026, 4:41 pm IST

இண்டிகோ நிறுவனத்துக்கு புதிய முதன்மைச் செயல் அலுவலராக பிரிட்டிஷ் ஏர்வேஸின் முன்னாள் தலைவர் வில்லியம் வால்ஷ் இன்று (மார்ச் 31) நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 3 வாரங்களுக்கு முன்பு, இண்டிகோவின் முதன்மைச் செயல் அலுவலராக இருந்த பீட்டர் எல்பர்ஸ் திடீரெனப் பதவி விலகினார்.

இந்த நிலையில், விமானத்துறையில் அதிக அனுபவம் கொண்ட புதிய முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்கப்பட்ட வால்ஷ் தற்ப்போது, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் இயக்குநராகவும் உள்ளார்.

ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, வால்ஷை முதன்மைச் செயல் அலுவலராக நியமிப்பதை அறிவித்து இண்டிகோ வெளியிட்ட செய்திக்குறிப்பில், சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தில் அவரது பதவிக்காலம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் இண்டிகோ நிறுவனத்தில் பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் முன்னாள் நிர்வாக இயக்குநர் அலோக் சிங்கை தனது முதன்மை வியூக அதிகாரியாக இண்டிகோ நிறுவனம் நியமித்துள்ளதாக கடந்த வாரம் (மார்ச் 23) அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

William Walsh, the former head of British Airways, has been appointed as the new Chief Executive Officer of Indigo.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.