காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் கோட்டயத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிறகு மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கேரளத்திற்கு இரண்டு நாள்கள் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி முதல் நாள் பயணத்தை சைக்கிள் ஓட்டி நிறைவு செய்தார்.
கேரளத்திற்கு ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி கேரளத்தில் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். முதல் நாளான இன்று பத்தினம்திட்டா, புதுப்பள்ளி, கோட்டயம் உள்ளிட்டப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தின் ஒரு பகுதியாக கோட்டயம் பகுதியில் ராகுல் காந்தி மிதிவண்டி ஓட்டினார். இது தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
கோட்டயத்தின் பிரசாரத்தின்போது பேசிய ராகுல் காந்தி, ஆளும் இடது ஜனநாயக முன்னணியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். 2016 தேர்தலின்போது ரப்பர் விலையை ரூ. 250 ஆக உயர்த்துவதாகக் கூறியிருந்ததாகவும், ஆனால் பினராயி விஜயன் அரசு கடந்த 10 ஆண்டுகளாகவே அதனைச் செய்யவில்லை எனவும் விமர்சித்தார். இந்த முறையுன் பொய்யான வாக்குறுதிகளையே இடதுசாரி அறிவித்துள்ளது.
ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி அமைத்ததும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே ரப்பர் விலையை ரூ. 250 ஆக நிர்ணயம் செய்வோம் என உறுதி அளித்தார்.
மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம் ரூ. 3,000 ஆக உயர்த்தப்படும். தனது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், நான் இங்கு எந்தவித பதற்றமும் இல்லாமல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். ஏன் என்றால், கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் என் தாயை பராமரித்து வருகிறார் என நெகிழ்ச்சியுடன் பேசினார்.
Summary
Rahul Gandhi takes bicycle ride in Kottayam amid two-day intense Kerala campaigning
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகம் வரும் ராகுல்! 3 மாவட்டங்களில் இன்று பிரசாரம்!

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை எப்போது?

கேரளத்தில் சைக்கிள் ஓட்டி ராகுல் காந்தி பிரசாரம் - புகைப்படங்கள்

கேரளத்தில் ராகுல் காந்தி நாளை(மார்ச் 25) முதல் பிரசாரம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

