தில்லியில் கேஸ் சிலிண்டரால் கணவன் தாக்கியதில் மனைவி பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு தில்லியின் புல் பிரஹலாத்பூர் பகுதியில், கேஸ் சிலிண்டரால் கணவன் தாக்கியதில் பெண் பலியானதாக போலீஸ் வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
அப்பகுதியில் குடும்பத் தகராறு வன்முறையாக மாறியது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் குழு, அந்தப் பெண் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதைக் கண்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.
உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஆரம்பகட்ட விசாரணையின்படி, வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது குற்றம்சாட்டப்பட்ட நபர் தனது மனைவியை கேஸ் சிலிண்டரால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் துயரமான சம்பவத்திற்கான பின்னணி என்ன என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
போலீஸார், சம்பவ இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
A woman was killed after she was struck with a gas cylinder by her husband in southeast Delhi's Pul Prahladpur area, police sources said on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தங்க முதலீடு மோசடி: கணவன் - மனைவி கைது

கணவன் - மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்? சுதா மூர்த்தி கூறும் 5 விஷயங்கள்!

பைக் மீது காா் மோதி விபத்து: கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு

கணவா் எரிவாயு சிலிண்டரால் தாக்கியதில் பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


