ஹைதராபாத் : பெற்றோரை கவனிக்கத் தவறும் ஊழியர்களிடமிருந்து ரூ. 10,000 சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தெலங்கானா பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தெலங்கானா சட்டப்பேரவையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) ‘பெற்றோர் நலனுக்கு ஆதரவளிக்கும் தெலங்கானா ஊழியர்கள் பொறுப்பேற்றல் மற்றும் கண்காணிப்பு மசோதா, 2026’ நிறைவேற்றப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான வருவாய் பாதுகாப்பை உறுதிசெய்வதை இந்த மசோதா இலக்காகக் கொண்டுள்ளது.
இது குறித்து பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ‘இந்த நாட்டில் ஏற்கெனவே தேசிய அளவிலான சட்டம், ‘பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல சட்டம், 2007’ இருந்தாலும் அச்சட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக புதிய மசோதா இருக்கும் என்று தெரிவித்தார்.
அதில் குறிப்பிடும்படியாக, தனியார் துறை ஊழியர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி, பொது மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் ஆகியோர் தங்களது வயதில் மூத்த பெற்றோர்களை பராமரிப்பதை கட்டாயமாக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில், அந்த நபரின் ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அல்லது ரூ. 10,000, இவற்றில் எது குறைவோ அந்தத் தொகையை தங்களது பெற்றோர்களுக்கு அவர்கள் வழங்குவதை கட்டாயமாக்குகிறது.
Summary
The Telangana Assembly on Sunday passed the 'Telangana Employees Accountability and Monitoring of Parental Support Bill, 2026,' aimed at ensuring financial security for senior citizens.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2.5.1976: கூட்டுறவுகள், கோவில்கள் நிர்வாக சீரமைப்பு மசோதா - கருணை இல்லங்கள், தெய்வீக பேரவைக்கு நிதி ஒதுக்கீடு நிறுத்தம்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற கருவைக் கொன்றது மோடிதான்: கார்கே

பழைய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வாருங்கள்; நிறைவேற்றுகிறோம்: பிரியங்கா காந்தி
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


