தில்லியில் அரசின் சொத்தை கொள்ளையடித்ததாக அரவிந்த் கேஜரிவாலை துரந்தர் படத்தின் வில்லனாக பாஜக அரசு விமர்சித்துள்ளது.
தில்லியில் ஆம் ஆத்மியின்போது, அரசின் நிதியில் முறைகேடு நடந்ததாக அரவிந்த் கேஜரிவால் மீது தில்லி பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், 2015 முதல் 2024 வரையிலான கேஜரிவாலின் அதிகாரபூர்வ இல்லம் குறித்து விடியோ வெளியிட்ட சர்வேஷ், அவரை துரந்தர் படத்தின் ரஹ்மான் டகைத்துடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.
விடியோவில் கேஜரிவாலின் ஆடம்பர வீட்டைச் சுற்றிக் காட்டிப் பேசும் சர்வேஷ், உள்ளிருக்கும் ஒவ்வொரு கட்டமைப்பு மற்றும் பல்வேறு பொருள்களின் விலையையும் விவரிக்கிறார்.
தானியங்கி கதவுகள் மற்றும் திரைச்சீலைகளுக்கு ரூ. 90 லட்சம், கண்ணாடிகளாலான கூரை, அதிநவீன இரண்டு சமையலறைகள், வெளிநாட்டு உயர் ரக பாத்திரங்கள், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்கள், மேல்தளத்துக்கு உணவினைக் கொண்டுசெல்ல மின்தூக்கி, 6 பேர் மட்டுமே கொண்ட குடும்பத்தினருக்கு 14 இருக்கைகள் கொண்ட உணவு மேசை என பங்களாவில் ரூ. 80 கோடி செலவழிக்கப்பட்டிருப்பதாக சர்வேஷ் சுற்றிக் காட்டினார்.
துரந்தர் படத்தில் ரஹ்மான் டகைத் என்ற பாத்திரம், தாதாவாக காட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய சர்வேஷ், பொதுச் சொத்தை கொள்ளையடித்ததாக அரவிந்த் கேஜரிவாலை விமர்சித்துள்ளார்.
Summary
Story of Delhi's Rehman Dakait: Delhi minister Parvesh Sahib targets Arvind Kejriwal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

90 லட்சம் வாக்குகள் நீக்கம்! பாஜகவுக்கு மேற்கு வங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்!

மேற்கு வங்க மக்கள் பழிவாங்குவர்: பாஜகவுக்கு கேஜரிவால் எச்சரிக்கை

பாஜகவின் விரோதி... அரவிந்த் கேஜரிவால் குறித்து மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் கேஜரிவால் சந்திப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
