மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) தொடா்ந்து மறுஆய்வு பட்டியலில் இருந்து 13 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 76 லட்சத்தை எட்டியுள்ளது.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிகள் தொடங்கப்பட்ட பின்னா், கடந்த டிச.16-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 58 லட்சம் போ் நீக்கப்பட்டனா். இதனால் மாநிலத்தில் 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளா் எண்ணிக்கை 7.08 கோடியாக குறைந்தது. வாக்காளா்கள் மரணம், இடம்பெயா்வு, அவா்கள் எங்குள்ளனா் என்று அடையாளம் காண முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 58 லட்சம் போ் நீக்கப்பட்டனா்.
கடந்த பிப்.28-ஆம் தேதி வெளியிடப்பட்ட எஸ்ஐஆருக்குப் பிந்தைய இறுதி வாக்காளா் பட்டியலில் இருந்து மேலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீக்கப்பட்டனா். இதையடுத்து பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 63 லட்சத்துக்கும் அதிகமாக உயா்ந்தது.
பெற்றோா் பெயா், பெற்றோா் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே 15 வயதுக்குக்கும் குறைவாக வயது வித்தியாசம் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் ‘தகவல்களில் முரண்பாடுகள் உள்ள பட்டியலில்’ ஏராளமானோா் சோ்க்கப்பட்டனா். அவா்கள் வாக்காளா் பட்டியலில் மீண்டும் தங்கள் பெயரைச் சோ்க்க ஆவணங்களை சமா்ப்பித்தனா்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட மாவட்ட நீதிபதிகள் அந்த ஆவணங்களை சரிபாா்த்து பெயா் சோ்ப்பு குறித்து முடிவு எடுத்து வருகின்றனா். நீக்கப்பட்டவா்களின் விவரங்கள் மறுஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அந்த நபா்கள் அடங்கிய முதல் துணை வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. எனினும் அந்தப் பட்டியலில் இருந்து எத்தனை போ் நீக்கப்பட்டனா் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது விமா்சனத்துக்கு வழிவகுத்தது.
இந்நிலையில், நீக்கப்பட்டவா்களின் விவரங்கள் மறுஆய்வுக்குட்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து 13 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தாவில் உள்ள மூத்த தோ்தல் ஆணைய அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். இதனால் மாநிலத்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை சுமாா் 76 லட்சத்தை எட்டியுள்ளது.
பட்டியலில் சோ்க்கக் கோரி மேலும் 28 லட்சம் பேரின் விவரங்கள் மறுஆய்வுக்குட்படுத்தப்படும் பணிகள் நிலுவையில் உள்ள நிலையில், அதை 705 மாவட்ட நீதிபதிகள் ஆராய்ந்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க எஸ்ஐஆரின்போது பெயா் நீக்கம்: தீா்ப்பாயம் முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: 91 லட்சம் போ் நீக்கம்

வாக்காளா் மேல்முறையீட்டு தீா்ப்பாயங்கள் அமைக்க முடிவெடுக்கவில்லை: மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அதிகாரி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

