தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அஸ்ஸாம் தேர்தல்: காங்கிரஸின் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்! பழங்குடியினருக்கு அதிக வாய்ப்பு!!

அஸ்ஸாம் பேரவைத் தேர்தலுக்கான 22 வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளதைப் பற்றி...

News image

இந்திய தேசிய காங்கிரஸ்.

Updated On :20 மார்ச் 2026, 8:23 am IST

அஸ்ஸாம் பேரவைத் தேர்தலுக்கான 22 வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல் தேதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) அறிவிக்கப்பட்டன.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கும் ஏப். 9-ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 126 அஸ்ஸாம் மாநிலத்தில், ஆளும் கட்சியான பாஜக நேற்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் தனது மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், 22 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியான கோக்ரஜாரில் இருந்து மாணிக் சந்திர பிரம்மாவும், துப்ரியில் இருந்து பேபி பேகமும் ஜலேஷ்வரில் இருந்து அஃப்தாப் உத்தின் மொல்லா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

அபயபுரியில் பிரதீப் சர்க்கார், கும்தாயிலிருந்து ரோசெலினா டிர்கி, பர்பத்ஜோராவில் இருந்து அஷ்ரபுல் இஸ்லாம் ஷேக், சிட்லி சிராங்கிலிருந்து மதிலால் நர்சரி, செங்காவிலிருந்து அப்துர் ரஹீம் அகமது மற்றும் பகபெத்பரியிலிருந்து ஜாகிர் ஹுசைன் சிக்தர் ஆகியோரையும் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.

ஜகதீஷ் மதாஹி பக்ஸாவிலிருந்தும், ரஃபி டைமரி தமுல்பூரிலிருந்தும், சோரன் டைமரி உதல்குரியிலும் போட்டியிடவுள்ளனர். லஹரிகாட் தொகுதியில் டாக்டர் ஆசிஃப் முகமது நஸரும், நாகோன்-படாத்ரபா தொகுதியில் டாக்டர் துர்லவ் சாமுவாவும் போட்டியிடுவார்கள்.

இந்தப் பட்டியலில் நடாரைச் சேர்ந்த சுனில் செத்ரி, ரோங்கோனாடியைச் சேர்ந்த ஜோயண்டோ கவுண்ட், லக்கிம்பூரிலிருந்து கானா புராகோஹைன், தகுகானாவிலிருந்து ஆனந்த நாரா, மகுமிலிருந்து சிபாநாத் செட்டியா, ஹோவர்காட்டைச் சேர்ந்த சஞ்சீப் டெரோன், அல்காபூர்-கட்லிச்சேராவைச் சேர்ந்த ஜுபைர் ஆனம் மஜும்தர் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

Summary

The Congress on Thursday released its third list of 22 candidates for the upcoming Assam Assembly elections, taking the total number of declared nominees to 87 as it accelerates preparations for the high-stakes polls.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.