ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் ராஜிநாமா எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் சுமார் ரூ. 1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இந்தியாவில் மிகப் பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவரும் இயக்குநருமான அதானு சக்ரவர்த்தி, நேற்று மாலை திடீரென ராஜிநாமா செய்வதாகத் தெரிவித்தார். இவரின் திடீர் முடிவு செய்திகளில் வெளியான நிலையில், இன்று காலை இந்திய பங்குச்சந்தையில் ஹெச்டிஎஃப்சியின் பங்குகள் ஆட்டம் கண்டன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (மார்ச் 19) காலை 74,750.92 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை அதிகபட்சமாக 2,000 புள்ளிகள் வரை சரிந்தது. அதைத்தொடர்ந்து வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 2,496.89 புள்ளிகள் குறைந்து 74,207.24 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 775.65 புள்ளிகள் குறைந்து 23,002.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. சென்செக்ஸில் 30 பங்குகளும் அதேபோல நிஃப்டியில் அனைத்துத் துறைகளும் இன்று சரிந்தன.
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள கடுமையான சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், நிஃப்டி50-ல் ஹெச்டிஎஃப்சி பங்குகள் நேற்றைய விலையிலிருந்து 8 சதவிகிதம் சரிந்தன. கடந்த 52 வாரங்களில் இல்லாத வகையிலான குறைந்தபட்ச மதிப்பான ரூ. 772 ஹெச்டிஎஃப்சி பங்குகள் பெற்றுள்ளன. இதனால், முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் மொத்த சந்தை மதிப்பு நேற்று மாலை ரூ. 12.96 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அதானு சக்ரவர்த்தியின் பதவி விலகலால், ஒரு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இன்று மாலை நிலவரப்படி, ரூ. 11.88 லட்சம் கோடியாக நிலைபெற்றுள்ளது.
ஹெச்டிஎஃப்சியின் பங்குகள் மார்ச் மாதத்தில் மட்டும் 9 சதவிகிதம் சரிந்து கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளன. ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் கடந்த ஓராண்டில் மட்டும் 15 சதவிகிதம் வரை சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
Summary
The sharp crash in HDFC Bank shares following the resignation of part-chairman Antanu Chakraborty, citing differences over "values and ethics", has significantly eroded investor wealth as the overall market capitalisation of India's largest private lender briefly slipped below the ₹12 lakh crore mark.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்ஃபோசிஸ் சிஇஓ-க்கு ரூ.52 கோடி ஊக்கத்தொகை: பங்குச்சந்தையில் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

2 சதவீதத்திற்கும் மேல் சரிந்த எச்.டி.எஃப்.சி. வங்கி பங்குகள்!
ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

