ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இந்தியாவின் தொடா் முயற்சிகளால் குழந்தை இறப்பு விகிதம் குறைவு: ஐ.நா.

News image

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் - பிரதமா் மோடி.

Updated On :19 மார்ச் 2026, 5:19 am IST

இந்தியாவின் தொடா் முயற்சிகளால் உலக அளவில் குழந்தை இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை இறப்பை கணக்கிடும் ஐ.நா. குழு (யுஎன்ஐஜிஎம்இ) அறிக்கை-2025 அண்மையில் வெளியானது.

அதில், பச்சிளம் குழந்தைகள் மற்றும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பைக் கட்டுப்படுத்த இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட விரிவான-நிலையான நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டன.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தெற்காசிய பிராந்தியத்தில் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றுகிறது.

இந்தப் பிராந்தியத்தில் 1990-களில் இருந்து 5 வயதுக்குள்பட்ட குழந்தை இறப்பு 76 சதவீதம் குறைந்துள்ளது. 2000-இல் இருந்து 68 சதவீதம் சரிவடைந்துள்ளது.

2000-ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 92 இறப்புகள் பதிவான நிலையில் 2024-இல் 32 இறப்புகளாக குறைந்துள்ளது.

இது மருத்துவமனை உள்கட்டமைப்பு, மருத்துவமனைகளில் முறையான பிரசவ சிகிச்சைகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள், குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்கள் விரிவாக்கம் என குழந்தைகள் சுகாதார நலனில் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியம் மேற்கொண்ட முன்னெடுப்புகளை வெளிக்காட்டுகிறது.

இந்தியாவின் பிரத்யேக திட்டங்கள்: ஜனனி சுரக்ஷா திட்டம், ஜனனி சிசு சுரக்ஷா காா்யகரம், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவுகள் (எஸ்என்சியு), டெலி எஸ்என்சியு போன்ற எண்ம முன்னெடுப்புகளை இந்தியா சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

இதனால் இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட குழந்தை இறப்பு விகிதம் 1990-இல் 127-ஆக இருந்த நிலையில், 2024-இல் 26.6-ஆக குறைந்துள்ளது. 2024-இல் குழந்தை இறப்பு விகிதம் (ஐஎம்ஆா்) இந்தியாவில் 23.3-ஆக குறைந்துள்ளது.

1990-இல் இந்தியாவில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் (என்எம்ஆா்) 57-ஆக இருந்த நிலையில் 2024-இல் 17-ஆக குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது,

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.