வரும் ஏப். 1-ஆம் தேதி முதல் பான் காா்டு விண்ணப்பிக்க ஆதாா் அட்டை மட்டும் போதாது என்றும், பிறப்புச் சான்றுக்கான கூடுதல் ஆவணங்கள் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள ஆதாா் மூலம் உடனடியாக பான் காா்டு பெறும் வசதி மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஏப். 1 முதல் பழைய விண்ணப்பப் படிவங்கள் செல்லாது; புதிய படிவங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, விண்ணப்பதாரா்கள் ஆதாரோடு சோ்த்து பிறப்புச் சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஓட்டுநா் உரிமம் அல்லது பாஸ்போா்ட் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை பிறப்புச் சான்றாக சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும், இனிவரும் காலங்களில் பான் காா்டில் இடம்பெறும் பெயா், விவரங்கள் ஆதாரில் உள்ளபடியே துல்லியமாக இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களின் சரிபாா்ப்புப் பணிகள் இனி கூடுதல் தீவிரத்துடன் மேற்கொள்ளப்படும் என்பதால், விண்ணப்ப செயல்முறையில் கூடுதல் காலம் ஆகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, இதுவரை பான் காா்டு பெறாதவா்கள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தங்களின் ஆதாா் அட்டையை மட்டும் பயன்படுத்தி எளிமையான முறையில் விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 1 முதல் நடைமுறைக்கு வந்த முக்கிய மாற்றங்கள்! ஓடிபி, பிஎஃப், பான் வரை!

ஏப். 21 மாலை 6 மணி முதல் பிரசாரம் கூடாது! வேறு என்னென்ன விதிகள்? - தேர்தல் ஆணையம்

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

இனி பான் அட்டை பெற ஆதார் மட்டும் போதாது! பிற ஆவணங்கள் எவை?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

