விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இந்திய கம்யூ. நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!

பாஜகவில் இணைந்தது பற்றி முகுந்தன் கூறியதாவது..

News image

பாஜக கொடி (கோப்புப்படம்) - dps

Updated On :16 மார்ச் 2026, 3:57 pm IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ சி. சி. முகுந்தன் கேரள பாஜகவில் இணைந்தார்

பட்யலினத்தவருக்காக (எஸ்சி) ஒதுக்கப்பட்ட நாட்டிகா தொகுதியில் தன்னை மீண்டும் வேட்பாளராகப் பரிசீலிக்காதது குறித்து சிபிஐ கட்சி மீது அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து முகுந்தன் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

முன்னதாக, அவர் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். புது தில்லியில் கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், திருச்சூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகுந்தன் பாஜகவில் இணைந்தார்.

இதுதொடர்பாக முகுந்தன் கூறியாதவது,

எஸ்சி, எஸ்டி சமூகங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் பங்களிக்கும் ஆற்றல் கொண்ட கட்சி பாஜக. மேலும், பல மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்புடன் நான் இக்கட்சியில் இணைந்துள்ளேன்.

மக்களின் நலன்களைப் பாதுகாப்பதும், அவர்களுக்குச் சிறந்த அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதும் எனது விருப்பமாகும். பாஜகவிற்கு எப்போதும் விசுவாசத்துடன் இருப்பேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

நடைபெற உள்ள தேர்தலில் தான் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்ததை ஒப்புக்கொண்ட அவர், அக்கட்சியுடனான முயற்சி ஏன் கைகூடவில்லை என்பது தனக்குத் தெரியவில்லை.

நாட்டிகா தொகுதியில் போட்டியிட தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்காமல், அதற்குப் பதிலாக முன்னாள் எம்எல்ஏ கீதா கோபியைத் தேர்வு செய்த சிபிஐ தலைமை மீது முகுந்தன் கடந்த வாரம் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

முகுந்தன் பாஜகவில் இணைந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான ஏ.என். ராதாகிருஷ்ணன், பி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Summary

MLA C C Mukundan, who was expelled from the CPI, joined the BJP here on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.