தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

குஜராத் துறைமுகம் வரும் 22 கப்பல்கள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

குஜராத் துறைமுகத்துக்கு 22 சரக்கு கப்பல்கள் வரவுள்ளது பற்றி...

News image

கோப்புப்படம் - Photo: Deendayal Port

Updated On :13 மார்ச் 2026, 10:29 am IST

அடுத்த 72 மணிநேரத்தில் 22 சரக்கு கப்பல்களை கையாள தயாராக இருப்பதாக குஜராத் துறைமுகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், குஜராத் மாநிலம், கண்ட்லாவில் உள்ள தீனதயாள் துறைமுக ஆணையம் வெளியிட்டிருக்கும் பதிவில், ”22 கப்பல்களை கையாளும் வகையில் பயணத் திட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, சிறந்த தரத்தில் சேவைகளை வழங்க துறைமுக பணியாளர்கள் திறமையாகச் செயல்பட்டு வருகின்றனர்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள், நிறுத்துமிடங்கள், சரக்கு கையாளுதல் குழுக்கள், கப்பல் வழித்தடங்கள் கண்காணிப்பு என ஒருங்கிணைப்புக் குழு நிறுவப்பட்டு அவசரகால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனை நேற்றிரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எரிபொருள் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், தீனதயாள் துறைமுக ஆணையம் 22 கப்பல்கள் வருகை தரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Story image

ஈரான் போர்த் தொடங்கிய பிறகு முதல்முறையாக செளதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் மும்பை துறைமுகத்துக்கு முதல் சரக்கு கப்பல் புதன்கிழமை வருகைதந்தது. லைபீரியா கொடியுடன் கூடிய இந்த சரக்கு கப்பல் ஷென்லாங் சூயஸ்மாக்ஸை இந்திய கேப்டன் இயக்கியுள்ளார். இந்த கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது டிராக்கிங் தொழில்நுட்பத்தை அணைத்து பயணம் செய்துள்ளது.

முன்னதாக, தீனதயாள் துறைமுகம் நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றிவந்த தாய்லாந்து கப்பல் மயூரி நரீ, ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்றபோது செவ்வாய்க்கிழமை ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில், இரண்டு இந்திய மலுமிகள் கொல்லப்பட்டனர்.

மாணவர்கள், கப்பல் மலுமிகள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள் உள்பட சுமார் 9,000 இந்தியர்கள் தற்போது ஈரானில் இருப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

Summary

22 ships arriving at Gujarat port! Official announcement!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.