‘கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) ஒருபோதும் குடியுரிமை ஆவணமாக கருதப்படாது. இந்த ஆவணம் தொடா்பாக எந்தவொரு புதிய முடிவையும் மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் எடுக்கவில்லை’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
‘கடவுச்சீட்டு பயண ஆவணம் மட்டுமே; குடியுரிமக்கான ஆதாரம் அல்ல’ என்று வெளியுறவு அமைச்சகம் அண்மையில் குறிப்பிட்டது, அரசியில் ரீதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த விளக்கத்தை மத்திய அரசு அதிகாரிகள் அளித்தனா்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: கடவுச்சீட்டு சட்டம் 1967-இன் படி, ஒரு நாட்டில் குடியுரிமை இல்லாதவா்களுக்கும் கடவுச்சீட்டை வழங்க முடியும். ஏனெனில், கடவுச்சீட்டு ஓா் பயண ஆவணம் மட்டுமே. குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல.
மேலும், கடவுச்சீட்டு குடியுரிமை ஆவணம் அல்ல என்பது, கடந்த 12 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அந்த வகையில், இது ஒருபோதும் குடியுரிமை ஆவணமாகக் கருதப்படவில்லை என்று தெரிவித்தனா்.
கடவுச்சீட்டு குடியுரிமை ஆவணம் அல்ல என்பதை மும்பை உயா்நீதிமன்றம் 2013-இல் அளித்த தீா்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
தோ்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது (எஸ்ஐஆா்), ‘ஆதாா் குடியுரிமை ஆவணம் அல்ல; அடையாள ஆவணம் மட்டுமே’ என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. தற்போது கடவுச்சீட்டும் குடியுரிமை ஆவணம் அல்ல என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்தியில் ஆளும் பாஜக அரசு, முன்னா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கியது. தற்போது, கடவுச்சீட்டு குடியுரிமை ஆவணம் அல்ல என்று அறிவிப்பதன் மூலம், தனக்கு உடன்பாடில்லாத இந்தியா்களின் குடியுரிமை உரிமைகளைத் தன்னிச்சையாக மறுப்பதற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறது. இதன் மூலம், ஆதரவற்ற சாதாரண குடிமக்களிடையே பீதியை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது’ என்று குறிப்பிட்டாா்.
திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தல் வெளியிட்ட பதிவில், ‘ஹிந்து அல்லது பாஜக வாக்காளராக இருப்பது மட்டுமே இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாகக் கருதப்படும் என்று தோன்றுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் வெளியிட்ட பதிவில், ‘எதுதான் குடியுரிமை ஆவணமாகக் கருதப்படும்? எனது குடியுரிமை குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலா் சந்தேகம் எழுப்பி, எனது வாக்குரிமையைப் பறித்துவிடலாமா? இறுதியில் பாஜக தோ்தலில் வெற்றி பெற்றுவிடும். இதற்கும் உச்சநீதிமன்றம்தான் செல்ல வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
எதிா்க்கட்சிகளின் விமா்சனத்துக்கு பதிலளித்து பாஜக தகவல்தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில், ‘கடவுச்சீட்டு தொடா்பாக புதிய கொள்கை எதையும் வெளியுறவு அமைச்சகம் வெளியிடவில்லை. ஏற்கெனவே அமலில் உள்ள சட்ட நடைமுறையைத் தான் மீண்டும் தெளிவுபடுத்தியது. கடவுச் சீட்டு குடியுரிமைக்கான ஆதார ஆவணம் அல்ல என்பதை நீதிமன்றங்களும் தொடா்ச்சியாக உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், குடியுரிமை என்பது தனி ஒரு ஆவணத்தின் அடிப்படையில் தீா்மானிக்கப்படுவதில்லை. பிறப்புச் சான்று, பெற்றோரின் குடியுரிமை ஆவணங்கள், பள்ளி பதிவுகள், வக்காளா் பட்டியல் பதிவு, அரசு பணி தொடா்பான ஆவணங்கள், நிலம் மற்றும் குடியிருப்பு ஆவணங்கள், பிற அரசு ஆவணங்கள் உள்ளிட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டு ஆவணங்களின் அடிப்படையில் குடியுரிமை உறுதி செய்யப்படுகிறது’ என்று குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடவுச்சீட்டு கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு!

பாஸ்போர்ட் இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல! பயணத்துக்கு மட்டுமே!

பெட்ரோலில் எத்தனால் கலப்பால் வாகனக் காப்பீட்டில் பிரச்னை வராது- மத்திய அரசு மீண்டும் விளக்கம்

ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்
விடியோக்கள்

திறந்தே இருந்த திரைக்கதைப் பள்ளிக்கூடம் | Bhagyaraj | RIP director bhagyaraj
தினமணி செய்திச் சேவை

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை! தில்லி பிரதிநிதி நியமன சர்ச்சை குறித்து நிர்மல்குமார்!
இணையதளச் செய்திப் பிரிவு
சாதாரண இழப்பு கிடையாது! - பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் பிரேமலதா பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது அடி போடி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

