தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

அயோத்தி ராமா் கோயில் முறைகேடு! சட்ட அதிகாரமில்லா விசாரணைக் குழு என கேஜரிவால் குற்றச்சாட்டு!

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) சட்டபூா்வ அதிகாரம் இல்லாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டிய ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் அதன் விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளாா்.

News image

அரவிந்த் கேஜரிவால்

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) சட்டபூா்வ அதிகாரம் இல்லாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டிய ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் அதன் விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளாா்.

அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு கிடைத்த நன்கொடைகள் தொடா்பான முறைகேடு குறித்த புகாா்களை விசாரிக்க அமைக்கப்பட்ட எஸ்ஐடி தனது ஆரம்பக்கட்ட அறிக்கையை உத்தர பிரதேச அரசுக்கு சமா்ப்பித்ததைத் தொடா்ந்து, புதன்கிழமை அரவிந்த் கேஜரிவால் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: இந்த விசாரணைக் குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. யாரையும் அழைத்து விசாரிக்கவோ, கைது செய்யவோ அல்லது சோதனை நடத்தவோ முடியாது. முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்றால், எந்த சட்டத்தின் கீழ் இந்தக் குழு அமைக்கப்பட்டது?”

இந்த விசாரணை உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தாமதப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் நிலம் வாங்குதல் தொடா்பாக இதேபோன்ற குற்றச்சாட்டுகள் 2021-ஆம் ஆண்டிலும் எழுந்தன. அப்போதும் எஸ்ஐடி அமைக்கப்பட்டது. அப்போதும் எஃப்ஐஆா் பதிவு செய்யப்படவில்லை; அந்த விசாரணையின் நிலைமை குறித்து இன்றுவரை தெரியவில்லை. அதேபோல் இந்த விசாரணையும் சில நாள்களில் மறக்கப்படும்.

மேலும், தற்போதைய விசாரணை கீழ்நிலை அதிகாரிகளை மட்டுமே குறிவைத்து நடைபெறுகிறது. முக்கிய முடிவுகளை எடுத்தவா்களை பாதுகாக்கும் முயற்சி நடைபெறுகிறது. நீண்ட காலமாக முறைகேடுகள் நடந்திருந்தால், அதில் கீழ்நிலை அதிகாரிகள் மட்டுமே ஈடுபட்டிருக்க வாய்ப்பு குறைவு. உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டுமெனில் விசாரணை உயா் நிலைக்கு சென்றாக வேண்டும்.

உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், ஏன் இந்த விவகாரம் மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ அல்லது அமலாக்க இயக்குநரகம் (இடி) ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்படவில்லை? சனாதன தா்மத்தை பின்பற்றும் பல பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விவகாரத்தில் வெளிப்படையான மற்றும் பாகுபாடற்ற விசாரணை நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனா் என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.