மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து, இன்று அதன் கட்சித் தலைவர் பதவிலியிலிருந்தே மமதாவை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது, சிவசேனையின் எம்.பி.க்களை பிரித்து மகாராஷ்டிரத்தில் இனி ஒரே சிவசேனை என கூறப்பட்டுள்ள நிலையில், அடுத்த இலக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிய நிலையில் சிவசேனை கட்சியின் ஆறு மக்களவை உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்ததைத் தொடர்ந்து, அடுத்த இலக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியா (சரத்) என்ற கேள்வி அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.
இதற்குக் காரணம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எட்டு மக்களவை உறுப்பினர்களில் ஐந்து பேர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்காகக் கட்சி மாறுவது குறித்தப் பேச்சுகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்குமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.
ஊடகத் தகவல்களின்படி, அண்மையில் சுனேத்ரா பவார் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த நிகழ்வு, இந்த ஊகங்களுக்கு வலுசேர்த்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பாஜக, மிகப்பெரிய கட்சிகளின் உறுப்பினர்களை குதிரை பேரம் நடத்தி கட்சியை இரண்டாக உடைத்து, பிறகு தங்களுடைய அதிகாரத்தின் மூலம், தங்கள் பக்கம் வந்தவர்கள்தான் உண்மையான கட்சியினர் என உத்தரவுகளைப் பெற்றுத் தருகிறது.
நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டால், பொது சிவில் சட்டம், தொகுதி மறுவரையறை மசோதா போன்ற முக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை மிக எளிதாக நிறைவேற்றிவிடலாம் என்றும் கருதுகிறது.
ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆபரேஷன் டைகர்' நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சரத் பவார் ஜூன் 19 அன்று தனது கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் அவசரக் கூட்டத்தை நடத்தினார். அடுத்து மகா விகாஸ் அகாடி சட்டப்பேரவை உறுப்பினர்களின் பொதுக்கூட்டம் ஜூன் 24 அன்று மும்பையில் நடைபெறவுள்ளது.
மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அஜித் பவார் கட்சியை ஒன்றிணைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டு வருகிறது.
மூத்த அரசியல் தலைவர் சரத் பவார் தனது அணியை ஒருங்கிணைத்து காக்க முடியுமா? அல்லது திரிணமூல் மற்றும் சிவ சேனை (உத்தவ்) அணியைப் போல உடையும் நிலை ஏற்படுமா என்பது ஒரு சில நாள்களில் தெரிய வரலாம்.
Summary
After the Trinamool and Shiv Sena, is the Nationalist Congress Party (NCP) the next in line to split?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!

ரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

திரிணமூல் காங். கணக்கை முடக்க வேண்டும்! தனியார் வங்கிக்கு முன்னாள் பொருளாளர் கடிதம்!

மமதாவுக்கு எதிரான திரிணமூல் காங். அணியில் 64 எம்எல்ஏ-க்கள்! நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு!
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு
