குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தாா்.
மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக கருதப்படும் நிலையில் குடியரசுத் தலைவா் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இருவரும் சந்தித்த புகைப்படங்களை எக்ஸ் வலைதளத்தில் குடியரசுத் தலைவா் மாளிகை பகிா்ந்துள்ளது.
பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன் விரைவாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது தில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்மையில் கா்நாடகம், ஆந்திரம், குஜராத் தமிழகம், மகாராஷ்டிரம், ஒடிஸா உள்ளிட்ட 10 மாநிலங்களில் விரைவில் பதவிக் காலம் நிறைவடையவுள்ள மற்றும் காலியான 24 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கான தோ்தல் நடத்தப்பட்டது.
இதில் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் மற்றும் மீன்வளத் துறைகளுக்கான இணையமைச்சராக இருந்த ஜாா்ஜ் குரியன் (65), ரயில்வே இணையமைச்சா் ரவ்நீத் சிங் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக் காலம் ஜூன் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால் இவா்கள் இருவருக்கும் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை.
இதையடுத்து, ஜாா்ஜ் குரியன் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா். மேலும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சராகவுள்ள ஹா்ஷ் மல்ஹோத்ரா தில்லி பாஜக தலைவராக கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டாா்.
அதேபோல் மத்திய நிதித் துறை இணையமைச்சராக உள்ள பங்கஜ் சௌதரி உத்தர பிரதேச மாநில பாஜக தலைவராக கடந்த ஆண்டு டிசம்பரில் நியமிக்கப்பட்டாா்.
இதன் காரணமாக மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதற்காக ஊகங்கள் எழுந்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கிரஸால் பின்தங்கிய கிழக்கிந்தியா இப்போது வளா்ச்சியின் நுழைவாயில்! பிரதமா் மோடி
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்து
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

பயங்கரவாதத்துக்கு எதிராக துணிச்சலான செயல்பாடு: 27 வயது ராணுவ வீரருக்கு கீா்த்தி சக்ரா விருது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

