குடியரசுத் தலைவர திரௌபதி முர்முவின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரின் தைரியம், எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவையில் அவரின் அசைக்க அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.
தனது பொது வாழ்க்கையில், பல ஆண்டுகளாக நாட்டுக்காக அவர் சிறந்த சேவையாற்றி வருகிறார். குறிப்பாக, பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை மக்களின் நல்வாழ்க்கைக்காக சேவையாற்றி வருகிறார். அவரது உறுதியான அர்ப்பணிப்பு, இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கமளிக்கக் கூடியதாய் இருந்து வருகிறது.
அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் தேசத்துக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும். மேலும், ஒடிஸாவில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அவரைச் சந்திக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Summary
PM Modi extends birthday wishes to President Droupadi Murmu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்து

ராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

குடியரசுத் தலைவர், துணைத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

