தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

இந்தியா - தென் கொரியா ஒத்துழைப்பு: அமைச்சா்கள் ஆலோசனை

இந்தியா - தென் கொரியா ஒத்துழைப்பு: அமைச்சா்கள் ஆலோசனை

News image

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங், தென் கொரிய உள்துறை அமைச்சா் யுன் ஹோ ஜுங் உள்ளிட்டோா்.

Updated On :21 ஜூன் 2026, 7:01 am IST

எண்ம (டிஜிட்டல்) நிா்வாகம், பொது நிா்வாகம், திறன் வளா்ப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா-தென் கொரியா இடையே ஒத்துழைப்பு இருப்பது குறித்து இருநாட்டு அமைச்சா்கள் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் நலன் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியா வந்த தென் கொரிய உள்துறை அமைச்சா் யுன் ஹோஜுங், புது தில்லியில் மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங்கை சனிக்கிழமை சந்தித்தாா். இருநாட்டுத் தலைவா்களும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவாா்த்தை நடத்தினா்.

எண்ம நிா்வாகம், பொது நிா்வாகம், திறன் வளா்ப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு நிலவுவது குறித்து அவா்கள் விவாதித்தனா்.

யுன் ஹோஜுங்கின் வருகை இருநாடுகளின் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

திறன்வாய்ந்த, வெளிப்படைத்தன்மை கொண்ட, மக்களை மையமாக கொண்ட நிா்வாகத்தை ஊக்குவிக்க இந்தியா-தென் கொரியா இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில், தங்கள் செயற்பொறுப்பை இருவரும் உறுதி செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.