பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அழகானவர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்துள்ளார்.
பிரான்ஸில் ஏவியான் நகரில் பிரதமர் மோடியுடனான இருதரப்பு சந்திப்பின்போது, செய்தியாளர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதாவது, பேச்சுவார்த்தையில் அவர் மிகவும் கடினமானவர். அவர் மிகவும் அழகான மனிதர்.
அவர் ஒரு தேவதையைப் போன்றவர். அவர்கள் வருவதைப் போலவே மோடி கடினமானவர். இதனால்தான் அவர் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். ஆனால், அப்படிப்பட்டவர்கள் வெகு சிலரே.
அவர் ஒரு நல்ல மனிதர் என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால், நான் சொல்கிறேன் - அவர் மிகவும் கடினமானவர். நாங்கள் (அமெரிக்கா) இந்தியாவுக்கு வருங்காலத்தில் செல்வோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, ரஷியா - உக்ரைன் போர் தொடர்பாக இரு நாட்டு அதிபர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் டிரம்ப் கூறினார்.
பிரான்ஸில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் - AP
முன்னதாக பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தானும் பிரதமர் மோடியுதான் இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலமான ஜோடி என்று கூறினார்.
கடந்த மாதம் இத்தாலி சென்றிருந்த பிரதமர் மோடி தான் இந்தியாவிலிருந்து உங்களுக்கு பரிசொன்று வாங்கிவந்திருக்கிறேன் என்று கூறி, மெலோனிக்கு மெலோடி சாக்லெட் கொடுத்த விடியோ வைரலாகியிருந்த நிலையில், இன்றைய விடியோவும் வைரலானது.

ஜி7 உச்சி மாநாட்டில் இத்தாலியப் பிரதமர் மெலோனி - இந்தியப் பிரதமர் மோடி - AP
Summary
He's like an angel, but is a tough trader: US President Donald Trump's big praise for PM Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா - ஈரான் போர்? டிரம்ப் அறிவிப்பு
பிரதமர் மோடி நல்ல நண்பர்: இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள டிரம்ப் விருப்பம்

நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
