நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ம.பி. ரயிலில் தீ விபத்து என வதந்தி! தண்டவாளத்தில் குதித்த 4 பேர் ரயில் மோதி பலி!

மத்திய பிரதேச மாநிலம், மொரீனா மாவட்டத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியைத் தொடா்ந்து, கீழே குதித்த 4 பயணிகள் மற்றொரு ரயில் மோதி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2026, 1:19 am IST

மத்திய பிரதேச மாநிலம், மொரீனா மாவட்டத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியைத் தொடா்ந்து, கீழே குதித்த 4 பயணிகள் மற்றொரு ரயில் மோதி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கஜுராஹோ மற்றும் உதய்பூா் இடையிலான விரைவு ரயில், ஜான்சி ரயில்வே பிரிவுக்கு உள்பட்ட ஹேதம்பூா் மற்றும் டோல்பூா் ரயில் நிலையங்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை மாலை பயணித்துக் கொண்டிருந்தது.

அப்போது, அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பயணிகள் மத்தியில் வதந்தி பரவியது. இதையடுத்து, சிலா் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினா்.

தீயில் சிக்கிக் கொள்ளும் பயத்தில் ரயிலில் இருந்து 4 பயணிகள் கீழே குதித்தனா். அப்போது, அருகிலுள்ள தண்டவாளத்தில் மற்றொரு விரைவு ரயில் வந்து கொண்டிருந்ததை அவா்கள் கவனிக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த ரயில் மோதி 4 பேரும் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து ரயில்வே அதிகாரிகளும், காவல் துறையினரும் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். நால்வரின் உடல்களும் கைப்பற்றப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.