தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் சாத்தியமாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 14) தெரிவித்தார்.
ஆரோக்கிய இந்தியா திட்டம் தொடங்கி 12 ஆண்டுகள் ஆனதைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான சுகாதார சேவை மேலும் மலிவாகக் கிடைக்கும் வகையிலும் அனைவராலும் அணுகக் கூடிய வகையிலும் கடந்த 12 ஆண்டுகளாக இந்தியா பாடுபட்டு வருகிறது.
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், ஏழை எளிய மக்களுக்கும் தரமான சுகாதார சேவையை வழங்குவதற்காக நாங்கள் பெருமை அடைகிறோம்.
இதுமட்டுமின்றி மக்கள் மருந்தகம் மூலம் மலிவான விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படுகின்றன. சிறுநீரகம் மற்றும் மூட்டு அறுவைச் சிகிச்சைகள் அனைவராலும் அணுகக் கூடிய வகையில் கிடைப்பது பலதரப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது.
மேலும் கூடுதலான மருத்துவக் கல்லூரிகள் மூலம் புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், மருத்துவக் கல்வியும் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான இந்தியாவை கட்டமைப்பதற்காக இந்த தளத்தில் இன்னும் அதிகப்படியான பணிகளை மேற்கொள்ளவுள்ளோம்'' என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கவும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் நாடு தழுவிய பிரசாரமாக தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இதேபோன்று நாட்டு மக்களின் சுகாதார சேவைக்காக ஆரோக்கிய இந்தியா திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Summary
Quality healthcare more accessible today PM Modi on 12 years of Swasth Bharat Mission
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தைக் கொண்ட நாடு இந்தியா: பிரதமர் மோடி

பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!

ஜி7 உச்சிமாநாட்டுக்கிடையே அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டம்!

51,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் பிரதமர் மோடி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


