தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தைக் கொண்ட நாடு இந்தியா: பிரதமர் மோடி

இந்தியாவின் சுகாதார அமைப்பு பற்றி பிரதமர் மோடி பேசியவை.

News image

பிரதமர் நரேந்திர மோடி - PTI

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

கடந்த 12 ஆண்டுகளில் தரமான மருத்துவ சேவைகளை மக்களுக்கு எளிதில் கிடைக்கும் விதமாக மாற்றியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான இந்தியா திட்டம் தொடங்கி 12 ஆண்டுகள் நிறைவடைந்தது பற்றி பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த 12 ஆண்டுகளாக சிறந்த தரமான மருத்துவ சேவையை எளிதில் கிடைக்குமாறு மாற்ற இந்தியா பாடுபட்டு வருகின்றது.

நலிவடைந்த மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கும் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தைக் கொண்ட நாடு என்பதில் நாம் பெருமைகொள்ள வேண்டும்.

பிரதம மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா திட்டத்தின் மூலம் மருந்துகள் மலிவான விலையில் கிடைக்கின்றன. ஸ்டெண்ட்கள் மற்றும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையின் போன்றவை அனைவரும் செலுத்தக்கூடிய விலையில் உள்ளதால் மக்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர்.

அதேநேரத்தில், அதிகமான கல்வி நிறுவனங்களும் இடங்களும் உருவாக்கப்பட்டதால், மருத்துவப் படிப்புகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் உள்ளன. ஆரோக்கியமான இந்தியாவைக் கட்டமைத்த இந்தத் தளத்தில் மேலும் கட்டமைப்புகளை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Summary

India has the world's largest healthcare system: PM Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.