பிகாரில் நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிகாரின் முசாஃபர்பூர் நகரில் நீட் தேர்வு மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான போலி வினாத்தாள்களை மாணவர்களிடமும், பெற்றோரிடமும் ஏமாற்றி விற்ற 4 பேரை அம்மாநில காவல்துறை நேற்று மாலை கைது செய்தது.
கைதான ஹர்ஷ், அமன் குமார், கன்னையா குமார் மற்றும் ஹர்ஷ் கனோடியா ஆகியோரிடமிருந்து 3 மொபைல் போன்களும், போட்டித் தேர்வுகளுக்கான போலி வினாத்தாள்களும் கைப்பற்றப்பட்டன.
”கைதான நபர்கள் ஒரு வலையமைப்பின் கீழ் சமூக வலைதளங்கள் மூலம் நீட் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் போலி வினாத்தாள்களை பெற்றோரிடமும் மாணவர்களிடமும் விற்று வந்தனர். இதுபற்றி முன்பு இதே புகாரில் கைதான மனிஷ் ஜா அளித்த புகாரின் பேரில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டனர்” என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், “விசாரணையில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் நபர்களிடம், தங்களிடம் தேர்வு வினாத்தாள் இருப்பதாக ஏமாற்றி சமூக வலைதளங்கள் மூலம் போலி வினாத்தாள்களை விற்றுள்ளனர்.
அதற்கான பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் வங்கி கணக்கில் அனுப்பச் சொல்லி, அதனை மணீஷ் ஜாவிடம் ஒப்படைத்து வந்தனர்” என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
Summary
Individuals arrested for selling fake NEET question papers!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெலிகிராம் மூலம் நீட் போலி வினாத்தாள் விற்பனை! ராஜஸ்தானில் ஒருவர் கைது!

காங்கிரஸ் ஆட்சியிலும் வினாத்தாள்கள் கசிந்தன: ராஜஸ்தான் துணை முதல்வர்

நீட் மறுதேர்வு! ஹெலிகாப்டரில் வரும் வினாத்தாள்கள்! நெல்லையில் ஒத்திகை

நீட் மறுதேர்வு: விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் வினாத்தாள்கள்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு

