ஜூன் 21-ந்தேதி நடைபெறும் நீட் மறு தேர்வுக்காக ஹெலிகாப்டரில் வினாத்தாள்கள் கொண்டு வருவதற்கான ஒத்திகை நெல்லை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.
தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மே மாதம் 3-ந்தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.
அதன்படி நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மறுதேர்வு வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் மையங்களை தயார் செய்யும் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன..
முறைகேடுகளை தடுக்க பல்வேறு வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாநகர பகுதியில் இன்று காலை வானில் ஹெலிகாப்டர் ஒன்று வட்டமடித்தது. தாழ்வாக பறந்த அந்த ஹெலிகாப்டர் மாநகர பகுதிகளான கே.டி.சி. நகர், அரசு பல்நோக்கு மருத்துவமனை, ஐகிரவுண்டு பழைய மருத்துவமனை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம் பகுதிகளில் வட்டமிட்டுள்ளது.
இதனை அந்த பகுதிகளில் இருந்த மக்கள் ஒருவித அச்சத்துடன் பார்த்தனர். இந்த நிலையில் அந்த ஹெலிகாப்டர் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தரை இறங்கியது.
விசாரணையில் அந்த ஹெலிகாப்டர் மூலம் நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்கள் கொண்டு வருவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
NEET Re-exam! Question papers arriving by helicopter! Mock drill in Nellai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லைக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்த நீட் மறுதேர்வு வினாத்தாள்!
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம்! நியாயமான, பாதுகாப்பான முறையில் நடத்த என்டிஏ உறுதி!

நீட் மறுதேர்வு: விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் வினாத்தாள்கள்!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு

