கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கேரள மாநிலம், கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விமான நிலையத்தின் பல்வேறு மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் இரண்டு விமான நிறுவனங்களின் மின்னஞ்சல்களுக்கு சனிக்கிழமை ஒரு மெயில் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அதில், வெடிகுண்டு மூலம் விமான நிலையம் தகர்க்கப்படும் என்றும், இதற்காக வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, விமான நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட விமானங்களில் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனைக்குப் பிறகு, அந்த மிரட்டல் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. விமான நிலைய உதவி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மிரட்டல் மின்னஞ்சல் ஜிமெயில் கணக்கிலிருந்து அனுப்பப்பட்டதால், குற்றவாளியைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ள போலீஸார் கூகுள் நிறுவனத்தின் உதவியையும் நாடியுள்ளனர் என்று அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர். இதனால் விமான நிலையத்தில் நேற்று சற்று பரபரப்பு நிலவியது.
Summary
The police have launched an investigation into a hoax bomb threat received by Kannur airport, officials said on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்! இன்று பஞ்சாபில் முக்கிய 5 கோயில்களுக்கு!

பிரதமரின் பெங்களூரு பயணத்தின்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று ஹைதராபாத் விமான நிலையத்துக்கு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


