ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி!

நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 4 பேர் பலியானது பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 10:15 pm IST

ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 4 பேர் பலியாகினர்.

ஜார்க்கண்டில் ராம்கார் வனத்துறைக்குள்பட்ட சாப்ரி-பும்ரி பகுதியில் கைவிடப்பட்ட நிலக்கரிச் சுரங்கம் ஒன்று உள்ளது. அங்கு விஷவாயு கசிவு காரணமாக 4 பேர் பலியாகினர். மூடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தினுள் சட்டவிரோதமாக நிலக்கரி எடுக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

முதலில் ஒருவர் சுரங்கத்திற்குள் சென்றபோது விஷவாயு தாக்கி மயங்கிய நிலையில், அவரை மீட்கச் சென்ற மூவரும் ஒருவர் பின் ஒருவராக சுரங்கத்திற்குள் சென்று பலியானதாக நேரில் பார்த்த சாட்சி தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கு வந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினரும் மீட்புப் பணியினரும் அங்கு சென்று சுரங்கத்தினுள் இருந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சுரங்கத்தினுள் சென்ற 4 பேரும் பலியானது உறுதிசெய்யப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பலியான நால்வரின் உடல்களும் பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

ராம்கார் வனத்துறைக்குள்பட்ட பகுதிகளில் பல கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அங்கு, பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக நிலக்கரி எடுக்கச்சென்று பலியாவோர் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அரசு சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் மக்கள் உயிரைப் பணயம் வைத்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

Summary

4 killed by toxic gas in Jharkhand coal mine!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.