புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ஜார்க்கண்டில் ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு மொபைல்கள் பறிமுதல்: 2 பேர் கைது!

ஜார்க்கண்டில் ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு மொபைல்களை ரயில்வே பாதுகாப்புப் படை பறிமுதல் செய்துள்ளது.

News image

கைது

Updated On :13 ஜூன் 2026, 5:00 pm IST

ஜார்க்கண்டில் ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு மொபைல்களை ரயில்வே பாதுகாப்புப் படை பறிமுதல் செய்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில், ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு ஸ்மார்ட்போன்களுடன் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார். இதன் மொத்த மதிப்பு ரூ. 59 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி கூறுகையில், "தகவல் கிடைத்ததும், குமானி மற்றும் பர்ஹர்வா ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு குழுவினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ரயிலின் பொதுப் பெட்டியில் சோதனை நடத்தியபோது, சந்தேகத்திற்கிடமான இரண்டு பயணிகளை ஆர்பிஎஃப் காவலர்கள் அடையாளம் கண்டனர்.

ஆர்பிஎஃப் குழுவினரைப் பார்த்ததும், அந்த சந்தேக நபர்கள் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோட முயன்றனர். இருப்பினும், ஆர்பிஎஃப் காவலர்கள் அவர்களை மடக்கிப் பிடித்தனர். பர்ஹர்வா ரயில் நிலையத்தில் அவர்களது பைகளை சோதனை செய்ததில், 174 பழைய ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

பின்னர் இருவரையும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைக்காக பர்ஹர்வா ரயில்வே போலீஸாரிடம் ஆர்பிஎஃப் ஒப்படைத்தது. பர்ஹர்வா ரயில் நிலையப் பொறுப்பாளர் ராம்ஷங்கர் சிங் கூறுகையில், இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேற்கு வங்கத்தின் மால்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த மொபைல் போன்களை வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக அவர்கள் கடத்திச் சென்றதாகவும் பர்ஹர்வா ஆர்பிஎஃப் ஆய்வாளர் சஞ்சீவ் குமார் கூறினார்.

Summary

Two persons from West Bengal were arrested from a train with 174 stolen smartphones worth nearly Rs 59 lakh in Jharkhand's Sahibganj district, an official said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.