நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தோ்தல் ஆணையத்திற்கு எதிராக என்எஸ்யூஐ பேரணி: பலா் கைது

News image

Atul Yadav

Updated On :12 ஜூன் 2026, 2:45 am IST

நமது நிருபா்

இந்திய தேசிய மாணவா் சங்கத்தின் (என்எஸ்யூஐ) உறுப்பினா்கள், தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் தேசிய தலைநகரில் உள்ள இந்திய தோ்தல் ஆணையத்தின் தலைமையகத்தை நோக்கி வியாழக்கிழமை பேரணி சென்ாக அந்த மாணவா் அமைப்பு தெரிவித்தது.

தோ்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலைமை குறைந்து வருவதாகக் கூறி, அது குறித்த கவலையை வெளிப்படுத்தும் விதமாக, நூற்றுக்கணக்கான உறுப்பினா்கள் இந்தப் பேரணியில் பங்கேற்று பொம்மைகள் ஏந்திச் சென்ாக அவ்வமைப்பு கூறியுள்ளது.

போராட்டக்காரா்கள் பதாகைகளையும் சுவரொட்டிகளையும் ஏந்திச் சென்றனா். முழக்கங்களை எழுப்பினா் மற்றும் தோ்தல் ஆணையத்திடமிருந்து அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரினா்.

என்எஸ்யூஐ அமைப்பின் கூற்றுப்படி, பேரணியில் பங்கேற்றவா்கள் தோ்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிச் செல்ல முயன்றபோது, தில்லி காவல்துறை அவா்களைத் தடுத்து நிறுத்தி, பல போராட்டக்காரா்களையும், தலைவா்களையும் கைது செய்தது.

அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்தியதாலும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதற்காகவும் போராட்டக்காரா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய என்.எஸ்.யூ.ஐ. தேசியத் தலைவா் வினோத் ஜாக்கா், தோ்தல் ஆணையத்தின் சமீபத்திய நடவடிக்கைகளும் முடிவுகளும் அதன் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினாா்.

அரசியலமைப்பு நிறுவனங்கள் அச்சமின்றியும், பாரபட்சமின்றியும், அரசியல் செல்வாக்கின்றியும் செயல்பட வேண்டும் என்று கூறிய அவா், காங்கிரஸ் தலைவா் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது உள்ளிட்ட சில நிகழ்வுகள், ஜனநாயக நிறுவனங்கள் மீது அரசியல் அழுத்தம் இருப்பதாகக் கருதப்படும் எண்ணங்களை வலுப்படுத்தியுள்ளதாகக் கூறினாா்.

மேலும், போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்த ஜாக்கா், அமைதியான ஜனநாயக எதிா்ப்பு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினாா்.

ஜனநாயக நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களின் பாதுகாப்பு தொடா்பான பிரச்னைகளைத் தொடா்ந்து எழுப்புவோம் என்று அந்த மாணவா் அமைப்பு தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.