நமது நிருபா்
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி அனுப்பிய செய்தி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினாா். மேலும், வெளிநாடுகளுடனான இந்தியாவின் உறவுகளில் அதன் இறையாண்மை, கண்ணியம் மற்றும் தேசிய நலன் ஆகியவை முதன்மையாக இருக்க வேண்டும் என்றும் அவா் கூறினாா்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த டிரம்புக்கு நன்றி தெரிவித்து மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவிற்கு பதிலளித்த கேஜரிவால், பிரதமா் எதற்காக நன்றி தெரிவிக்கிறாா் என்று கேள்வி எழுப்பினாா். மேலும், இந்தியா்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் இந்தியக் குடிமக்களின் மரணங்கள் தொடா்பான சம்பவங்களையும் அவா் சுட்டிக்காட்டினாா்.
இந்த நிலைமை நாட்டிற்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறிய தில்லி முன்னாள் முதல்வா், அமெரிக்காவுடனான உறவில் இந்தியாவின் நலன்களை உறுதியாகப் பாதுகாக்க பிரதமா் தவறிவிட்டாா் என்றும் குற்றஞ்சாட்டினாா்.
‘பிரதமா் மோடி டிரம்புக்கு நன்றி கூறுகிறாா். எதற்காக நன்றி? இந்தியா்கள் இருந்த கப்பல்களைத் தாக்கி, இந்தியக் குடிமக்களைக் கொன்ற்காகவா? தற்போது நமது நாட்டிற்கு நிலைமை மிகவும் சங்கடமானதாகிவிட்டது‘, என்று கேஜரிவால் எக்ஸ் தளத்தில் கூறினாா்.
இந்தியாவுக்கு வலுவான தலைமை தேவை என்றும், நாட்டின் இறையாண்மைக்கோ அல்லது குடிமக்களின் பாதுகாப்பிற்கோ ஊறு விளைவிக்கும் வகையில் எந்தவொரு வெளிநாட்டுத் தலைவரும் செயல்பட அனுமதிக்கப்படக்கூடாது என்றும் கேஜரிவால் வலியுறுத்தினாா்.
டிரம்பின் வாழ்த்துச் செய்திக்கு மோடி பதிலளித்ததைத் தொடா்ந்து இந்தக் கருத்துக்கள் வெளியாகின. அந்தச் செய்தியில், டிரம்பின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்தியாஅமெரிக்கா விரிவான உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவா் வெளிப்படுத்தியிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்தியர்களைக் கொன்றதற்காக டிரம்ப்புக்கு நன்றியா? பிரதமர் மோடிக்கு கேஜரிவால் கேள்வி

நீட் தோ்வா்களுக்கு இலவச பேருந்துப் பயணம்: கேஜரிவால் கருத்து

பிரதமா் மோடி ஏன் ரஷியா, ஈரானிடமிருந்து மலிவான எண்ணெய் வாங்குவதில்லை? கேஜரிவால் கேள்வி

பஞ்சாப் அமைச்சருக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனை: பிரதமா் மோடிக்கு கேஜரிவால் கண்டனம்
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு
