பிகாரில் நடைபெற்ற மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
பிகார் மேலவைத் தேர்தலில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, பிகார் மேலவைத் தேர்தலில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 9 வேட்பாளர்களும், ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பீகாரின் முன்னாள் முதல்வரும் ஜேடி(யு) கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாரும், போஜ்புரி நடிகரும் பாடகருமான பவன் சிங் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். சம்ராட் சௌத்ரி தலைமையிலான என்.டி.ஏ அரசில் நிஷாந்த் குமார் மாநில சுகாதார அமைச்சராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக நடைபெறும் 9 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஒரு இடம் இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்பட்டது.
பாஜக மற்றும் ஜேடி (யு) கட்சிகளிலிருந்து தலா 4 வேட்பாளர்களும், எல்ஜேபி (ஆர்வி) கட்சியிலிருந்து ஒரு வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எதிர்க்கட்சியான ஆர்ஜேடி வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேலவை உறுப்பினர்கள்:
ஜேடி (யு) - நிஷாந்த் குமார், பாரதி மேத்தா, ஷிவானி தேவி பிரஜாபதி மற்றும் லலன் பிரசாத்;
பாஜக - பவன் சிங், சஞ்சய் பிரகாஷ் மயுக், அனில் தாக்கூர் மற்றும் ஷீலா பண்டிட்;
எல்ஜேபி (ஆர்வி) - அஷ்ரஃப் அன்சாரி;
ஆர்ஜேடி - சுனில் சிங்;
Summary
Bihar Legislative Council Election: All 10 candidates elected unopposed
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கர்நாடக மேலவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்த பாஜக எம்எல்ஏக்கள்! மாநில தலைவருக்கு நிதின் நபின் சம்மன்!

குஜராத்தில் பாஜகவின் 4 மாநிலங்களவை வேட்பாளர்களும் வெற்றி!

இயக்குநர் பாரதிராஜா மறைவு: இன்றைய படப்பிடிப்புகள் ரத்து

2021 தேர்தலில் அதிக வித்தியாசத்தில் வென்றவர்களின் இன்றைய நிலை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


