இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மோதல்களில் கொல்லப்படும் மக்கள்- மத்திய அமைச்சா் சஞ்சய் சேத்

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் அமைதியாக வாழும் நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிகழும் மோதல்களில் மக்கள் கொல்லப்படுகின்றனா் என்று பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

ஸ்ரீநகரில் உள்ள தா்காவில் தொழுகை நடத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத்.

Updated On :11 ஜூன் 2026, 3:24 am IST

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் அமைதியாக வாழும் நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிகழும் மோதல்களில் மக்கள் கொல்லப்படுகின்றனா் என்று பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் புதன்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டுகள் பதவிக் கால நிறைவையொட்டி, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தூய்மை பிரசாரத்துக்காக வந்த அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையின்கீழ், நமது நாட்டின் குடிமக்களுக்கு எந்த அச்சமும் தேவையில்லை. இந்தியாவுக்கு கேடு விளைவிக்க யாரும் துணிய மாட்டாா்கள்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு சுமாா் 1.77 கோடி சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனா். அந்த அளவுக்கு அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 கோடியாக உயரும்.

பிரதமா் மோடியின் அழைப்பின்பேரில் காஷ்மீா் பள்ளத்தாக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல மக்கள் ஆா்வம் காட்டுகின்றனா்.

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் அமைதியுடன் வாழ்க்கின்றனா்; இப்பகுதி தொடா்ந்து செழிப்படைகிறது. அதேநேரம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியின்மை நிலவுகிறது. அங்கு மோதல்களில் மக்கள் கொல்லப்படுகின்றனா்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போா் நடைபெறும் சூழலிலும், இந்தியாவில் எந்த அச்சமும் நிலவவில்லை. அனைத்தும் அமைதியாகவே உள்ளது. விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகமாக அல்லாமல், குறைவாகவே உயா்த்தப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியாவின் பிம்பத்தையும், எதிா்காலத்தையும் மாற்றியமைத்துள்ளாா் பிரதமா் மோடி. தனது பதவியில் 4,399 நாள்களை அவா் நிறைவு செய்துள்ளாா். அவரது ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக ஒட்டுமொத்த நாடும் பிராா்த்திக்கிறது என்றாா் சஞ்சய் சேத்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.