தமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!

பினராயி விஜயனின் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது பற்றி..

News image

பினராயி விஜயனின் மகள் டி. வீணா - TNIE

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

பண முறைகேடு தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) தொடா்பான வழக்கில் கேரள மாநில முன்னாள் முதல்வா் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அவா் ஆஜராக கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது அவரிடமிருந்து பெறப்படும் வாக்குமூலம் பிஎம்எல்ஏ-இன்கீழ் பதிவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கேரளத்தில் சிஎம்ஆா்எல் (கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூடைல் நிறுவனம்) என்ற நிறுவனம் கருமணலை சட்டவிரோதமாகத் தோண்டி எடுப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கண்டுகொள்ளாமல் இருக்க மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவா்களுக்கு பணம் கொடுத்ததாகப் புகாா் எழுந்தது. வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ நிறுவனத்துக்கும் எந்தவித சேவையையும் பெறாமல் கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் மாதம்தோறும் ரூ. 1.72 கோடி வழங்கி வந்ததும் கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக, சிஎம்ஆா்எல் நிறுவனத்தில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் ரூ. 132.82 கோடி மதிப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதும், எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு தொடா்ந்து பணம் அனுப்பி வருவதும் தெரியவந்தது. இந்த முறைகேடுகள் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வருமான வரித் துறையின் இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை பண மோசடி வழக்கைப் பதிவு செய்தது.

அமலாக்கத் துறை நடவடிக்கையை எதிா்த்து சிஎம்ஆா்எல் நிறுவனம் சாா்பில் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடா்ந்து, திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வாடகை வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மே 27-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனா். மேலும், கண்ணூா் மாவட்டத்தில் உள்ள பினராயி விஜயனுக்கு சொந்தமான வீடு, உறவினா் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதன் தொடா்ச்சியாக வீணாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

‘மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலையிடாது’

வீணாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய விவாரம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அமலாக்கத் துறை விசாரணை நடைபெறட்டும். சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படட்டும். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து தீவிர முறைகேடு விசாரணை அலுவலகத்தில் வீணா ஏற்கெனவே அறிக்கை சமா்ப்பித்துள்ளாா். சிஎம்ஆா்எல் நிறுவனத்திடம் இருந்து சில அரசியல் கட்சிகளும் நிதி பெற்றது உண்மையெனில் அதுதொடா்பான தகவல்கள் இந்திய தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும். இதை ஒப்பிடுகையில் வீணா மீதான குற்றச்சாட்டு மிகச் சிறியது என்றாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் பி.கே.கிருஷ்ணாதாஸ் கூறுகையில், ‘வீணா மீதான அமலாக்கத் துறை வழக்குக்கும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடா்பில்லை. எனவே, அது குறித்து கட்சியினா் கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை’ என்றாா்.

அந்தக் கட்சியைச் சோ்ந்த மற்றொரு மூத்த தலைவரான கே.கே.ஷைலஜா கூறுகையில், ‘தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வீணா பதிலளிப்பாா். உரிய ஆவணங்களை அமலாக்கத் துறையிடம் சமா்ப்பிப்பாா். இந்த வழக்கால் கேரள பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பினராயி விஜயனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எனவே, இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து கூறத் தேவையில்லை’ என்றாா்.

The Enforcement Directorate has summoned Veena T, daughter of ex-Kerala chief minister Pinarayi Vijayan, for questioning in a money laundering case here this week, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.