கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!

வர்த்தகர்களை விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடுமையாகச் சாடினார்.

News image

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் - file photo

Updated On :9 ஜூன் 2026, 4:30 pm IST

வர்த்தகர்களை விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடுமையாகச் சாடினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

பஞ்சாபின் இந்து வர்த்தகர்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகத் திகழ்வதுடன், வளமான பஞ்சாப் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளதாக இந்தியில் பதிவிட்டுள்ளார்.

ஈடி கட்சி என விமர்சிக்கப்படும் பாஜகவைச் சாடிய பகவந்த் மான், மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வர்த்தகர்களைத் துன்புறுத்தவே பாஜக விரும்புகிறது.

வர்த்தகர்களுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து அவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயல்கின்றனர். இதைப் பஞ்சாப் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். பஞ்சாப் அரசு வர்த்தகர்களுடன் துணை நிற்கிறது.

மொபைல் போன் விற்பனை தொடர்பான ரூ. 100 கோடி ஜிஎஸ்டி மோசடி வழக்கு மற்றும் அதுதொடர்பான பணமோசடி விசாரணைக்காக அமைச்சர் அரோரா மற்றும் சிலரின் இடங்களில் அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை சோதனைகள் நடத்தியது.

பஞ்சாபின் ஜலந்தர் மற்றும் லூதியானா, மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பரேலி மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் உள்ள சுமார் ஆறு இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சண்டீகரில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நாள் முழுவதும் நடைபெற்ற சோதனைகளுக்குப் பிறகு, 62 வயதான அரோரா கடந்த மாதம் மத்திய அமைப்பால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.

அரோரா மின்சாரம், தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, பஞ்சாப் அரசு அவரது துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கியது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய இந்து முகமாகவும், லூதியானாவைச் சேர்ந்த தொழிலதிபராகவும் திகழ்கிறார்.

Chief Minister Bhagwant Mann on Tuesday slammed the Modi government for "harassing traders" after the ED conducted raids in a money laundering probe involving Punjab Minister Sanjeev Arora.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.