ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ராஜௌரி மாவட்டத்தில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் போது, பாறையிலிருந்து தவறி கீழே விழுந்த இந்திய ராணுவர் ஒருவர் பலியானார்.
ராஜௌரி மாவட்டத்தில் உள்ள கம்பீர் முகலான் - டோரிமல் பகுதியில், 'ஆபரேஷன் ஷெருவாலி' என்ற ராணுவ நடவடிக்கையில் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, கரடுமுரடான மற்றும் சவாலான மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்த வீரர், கால் இடறி ஒரு பாறைச் சரிவிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பீர் முகலான் - டோரிமல் பகுதிகளின் அடர்ந்த காடுகள் மற்றும் கடினமான நிலப்பரப்புகளில் மேற்கொள்ளப்படும் 'ஆபரேஷன் ஷெருவாலி' நடவடிக்கையானது, 16 ஆவது நாளாகத் தொடர்கிறது. அப்பகுதியில் பதுங்கியிருக்கும் சந்தேகத்திற்கிடமான பயங்கரவாதிகளைக் கண்டறியும் முயற்சிகளை பாதுகாப்புப் படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இருப்பினும், பலியான ராணுவ வீரர் குறித்த எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
Summary
An Indian Army soldier died after slipping and falling from a rock during an army operation in the Rajouri district of Jammu and Kashmir.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்த முதியவா் சடலம் மீட்பு

இந்திய ராணுவ தலைமைத் தளபதியின் பேச்சுக்கு பாகிஸ்தான் விமர்சனம்!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


