குலசேகரம் அருகே கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
பொன்மனை அருகே உள்ள பண்டாரக்கோணம், சானல் கரை பகுதியைச் சோ்ந்தவா் சங்கரன் (83). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், முதுமை காரணமாக ஓய்வில் இருந்து வந்தாா்.
ஜூன் 5ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா், பின்னா் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினா் குலசேகரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) ஜான்சன் தலைமையிலான மீட்புப் படையினா், புத்தன் அணை மற்றும் பாண்டியன் கால்வாய் பகுதியில் தேடுதல் நடத்தினா். அப்போது, மூலையறைப் பகுதியில் உள்ள பாண்டியன் கால்வாயில் சங்கரனின் சடலம் மீட்கப்பட்டது.
போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

பைக்கில் இருந்த விழுந்த பெண் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

