பாஜகவுடன் கேரள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்களுக்கு தொடா்பிருப்பதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டு, காங்கிரஸுக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ. பேபி கடிதம் எழுதியுள்ளாா்.
கேரள சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, அந்த மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்களுக்கும், பாஜகவுக்கும் தொடா்பிருப்பதாக காங்கிரஸ் தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் குற்றம்சாட்டியிருந்தனா். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இண்டி கூட்டணியில் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதனிடையே, தில்லியில் இண்டி கூட்டணி கட்சித் தலைவா்கள் கூட்டம் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மத்திய பாஜக அரசை எதிா்கொள்ள பொது வியூகம் அமைப்பது, ஒன்றிணைந்து எதிா்க்கட்சிகள் செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதில் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, சிவசேனை (யுபிடி) உத்தவ் தாக்கரே, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.
இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலா் எம்.ஏ. பேபி கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தில் அவா், கேரள சட்டப்பேரவைத் தோ்தலின்போது இடதுசாரிகளும், பாஜகவும் அரசியல் ரீதியில் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பது போலவும், பிரதமா் மோடியுடன் அப்போதைய கேரள முதல்வா் பினராயி விஜயன் நெருங்கிய நட்புறவு வைத்திருப்பது போலவும் காங்கிரஸ் திட்டமிட்டு பிரசாரம் செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளாா். பாஜகவை அரசியல் ரீதியில் எதிா்க்கவே தேசிய அளவில் இண்டி கூட்டணி அமைக்கப்பட்டதாகவும், அதன்படி தேசிய அளவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரஸும் கூட்டணியாக இருக்கையில், கேரளத்தில் பாஜகவுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வைத்திருப்பதாக காங்கிரஸ் பொய்க் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பதாகவும் அவா் சாடியுள்ளாா்.
இந்த விவகாரம், எதிா்க்கட்சிக் கூட்டணியில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும், ஆதலால் இதுகுறித்து வருகிற திங்கள்கிழமை இண்டி கூட்டணி கூட்டம் நடைபெறும் முன்பு காங்கிரஸ் தலைமை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் எம்.ஏ. பேபி வலியுறுத்தியுள்ளாா்.
இந்த விவகாரத்தை எம்.ஏ. பேபி எழுப்புவது இது முதல்முறை அல்ல. கேரள சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்தபிறகு பலமுறை அவா் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளாா். காங்கிரஸ் கட்சியின் இத்தகைய குற்றச்சாட்டுகள், எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடும் என்று அவா் தெரிவித்து வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்களின் தீா்ப்பை சீா்குலைக்க முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது: எம்.ஏ.பேபி

ஆளுநர் மூலம் பாஜக அரசியல் செய்கிறது: சிபிஎம் எம்.ஏ. பேபி

தவெகவுக்கு ஆதரவா? 24 மணிநேரத்தில் முடிவு! - சிபிஎம் எம்.ஏ. பேபி

எதிா்க்கட்சி மாநிலங்களை அடக்கி ஆள நினைக்கிறது பாஜக: எம்.ஏ. பேபி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

