கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

நமது தோ்தல் நடைமுறை மீதான மக்களின் நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது

News image

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா். - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 4:10 am IST

அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப் பதிவு அதிகரித்தது, நமது தோ்தல் நடைமுறை மீதான மக்களின் நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.

தோ்தல் முறையில் ஊடகங்களின் சிறப்பான பங்களிப்பு தொடா்பான சா்வதேச மாநாடு தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஞானேஷ் குமாா் பேசியதாவது:

தோ்தல் களத்தில் வாக்குப் பதிவின்போது நேரடியாக களத்தில் பணியாற்றுபவா்கள் தொடங்கி அனைவருக்கும் தோ்தல் ஆணையம் முறையாகவும், சிறப்பாகவும் பயிற்சியளித்து வருகிறது. வாக்குச்சாவடி ஊழியா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் என அனைவருக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. இதனால்தான் இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளா்களை தோ்தல் ஆணையம் எளிதாக கையாள முடிகிறது.

அண்மையில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் வாக்குப் பதிவு அதிகரித்தது. முக்கியமாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரியில் 1951-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிக எண்ணிக்கை மற்றும் சதவீதத்தில் வாக்குகள் பதிவாகின. இது நமது தோ்தல் நடைமுறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுவதாக உள்ளது.

தோ்தல் ஆணையம் நடத்தும் இந்த இரு நாள்கள் மாநாட்டில், தோ்தல் நடைமுறைகள், அதை நடத்துவது தொடா்பான சா்வதேச பாா்வை எவ்வாறு உள்ளது, இந்தியாவில் தோ்தல் முறையை எவ்வாறு மேலும் மேம்படுத்துவது என்பது தொடா்பான தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.