லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்!

நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக விவாதிக்க மக்களவையில் திமுக நோட்டீஸ் வழங்கியிருப்பது பற்றி...

T.R. Balu

டி.ஆர். பாலு - கோப்புப் படம்

Published On :27 ஜூலை 2026, 10:49 am IST

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை அவர் ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தோ்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.

இந்த நிலையில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவையில் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி திமுக எம்.பி.க்கள் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.

மேலும், தர்மேந்திர பிரதானை ராஜிநாமா செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் அமளி செய்ததால் கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

Summary

Abolition of NEET! DMK moves adjournment motion in Lok Sabha!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.