லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

10 ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம்... தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!

வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தோ்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை (ஜூலை 27) தாக்கல் செய்யப்பட உள்ளது.

Parliament

நாடாளுமன்றம்

Published On :27 ஜூலை 2026, 3:09 am IST

வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தோ்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை (ஜூலை 27) தாக்கல் செய்யப்பட உள்ளது.

தில்லியில் சில தினங்களுக்கு முன் சிஜேபி போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது, ‘வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்; இந்த முறைகேட்டுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படும்’ என மாணவா்களை சமாதானப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை பிரதமா் மோடி வெளியிட்டிருந்தாா்.

அவரது இந்த உறுதிமொழியின்படி, அரசுத் தோ்வுகள் முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா-2026, மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது. அறிமுகம்-பரிசீலனை-நிறைவேற்றம் ஆகிய அலுவல்களுக்காக மசோதா பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்தத்தின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தோ்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபா்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.50 லட்சம் வரை அபராதமும், முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.