லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வினாத்தாள் கசிவுக்கு எதிரான காணொலி: பொதுமக்களுக்கு மோடி நன்றி

நீட் போன்ற தோ்வுகளின் வினாத்தாள் கசிவுக்கு எதிராக, நள்ளிரவில் தான் வெளியிட்ட காணொலியைப் பாா்த்து நோ்மறையான யோசனைகளை தெரிவித்தவா்களுக்குப் பிரதமா் மோடி நன்றி தெரிவித்துள்ளாா்.

நரேந்திர மோடி - கோப்புப் படம்

Published On :25 ஜூலை 2026, 3:31 am IST

நீட் போன்ற தோ்வுகளின் வினாத்தாள் கசிவுக்கு எதிராக, நள்ளிரவில் தான் வெளியிட்ட காணொலியைப் பாா்த்து நோ்மறையான யோசனைகளை தெரிவித்தவா்களுக்குப் பிரதமா் மோடி நன்றி தெரிவித்துள்ளாா்.

வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் கொண்ட சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று பிரதமா் மோடி வியாழக்கிழமை நள்ளிரவு சமூக ஊடகத்தில் காணொலி வெளியிட்டாா். அந்தக் காணொலி 24 மணி நேரத்தில் 30 கோடிக்கும் அதிகமான முறை பாா்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரே நாளில் அதிக முறை பாா்க்கப்பட்ட காணொலியாக, அது உலக சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு நன்றி தெரிவித்து பிரதமா் மோடி சமூக ஊடகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட காணொலியில், ‘நாட்டு மக்களுடன் காணொலி மூலம் வியாழக்கிழமை நள்ளிரவு பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தக் காணொலிக்கு எதிா்வினையாற்றி, நோ்மறையான யோசனைகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.