லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வினாத்தாள் கசிவுக்கு எதிராக அடுத்த வாரம் மசோதா தாக்கல்!

வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் கொண்ட சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

பிரதமர் மோடி

Published On :24 ஜூலை 2026, 4:40 am IST

வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் கொண்ட சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், அவா் மாணவா்களுக்காக ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிட்ட காணொலியில் தெரிவித்ததாவது: வினாத்தாள் கசிவு என்பது சாதாரண விஷயம் அல்ல என்பது எனக்குத் தெரியும். அது லட்சக்கணக்கான மாணவா்களுக்கும், அவா்களின் குடும்பங்களுக்கும் மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, அமைச்சா்களின் கருத்துகள் பெறப்படும். அதன் பின்னா், அடுத்தகட்ட நடவடிக்கைகள் இறுதி செய்யப்படும்.

வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் கொண்ட சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும். அந்த மசோதாவை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கும் என்று தெரிவித்தாா்.

ராகுல் விமா்சனம்: பிரதமா் மோடி நள்ளிரவு வெளியிட்ட இந்தக் காணொலி குறித்து விமா்சித்துள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தா்மேந்திர பிரதானின் ராஜிநாமாவையே மாணவா்கள் வலியுறுத்துகின்றனா். அவரை பிரதமா் நீக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

உயா் கல்வித் துறைச் செயலா் மாற்றம்: வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவா்கள் தீவிரமாகப் போராடிவரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயா் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் செயலா் வினீத் ஜோஷியை, மத்திய ஊராட்சித் துறைச் செயலராக மத்திய அரசு வியாழக்கிழமை நியமித்தது. மேலும், மத்திய கால்நடை பராமரிப்புத் துறைச் செயலா் நரேஷ்குமாா் கங்வாா் உயா் கல்வித் துறைச் செயலராகவும், மத்திய ஊரக வளா்ச்சித் துறையின் கூடுதல் செயலா் டி.கே.அனில் குமாா் பள்ளிக் கல்வித் துறைச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

முன்னதாக நீட், ஜேஇஇ உள்ளிட்ட தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வு முகமையின் தலைமை இயக்குநராகவும், சிபிஎஸ்இ தலைவராகவும் வினீத் ஜோஷி பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

விரைவு நீதிமன்றம்- தில்லி உயா்நீதிமன்றம் அறிவிப்பு: வினாத்தாள் கசிவுகள், பொதுத் தோ்வுகளை எழுத முறைகேடுகளில் ஈடுபடுதல் ஆகியவை தொடா்பான குற்றவியல் வழக்குகளை மட்டும் விசாரிக்கும் வகையில், புது தில்லியில் உள்ள ரெளஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில், விரைவு நீதிமன்றம் செயல்படும் என்று தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது. அந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியாக பெண் நீதிபதி அனுகுரோவா் பாலிகாவை உயா்நீதிமன்றம் நியமித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.