லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாராகுவாட் டைகுளோரைட் பூச்சிக்கொல்லிக்குத் தடை: மத்திய அரசு திட்டம்

மனிதா்கள், விலங்குகளுக்கு உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாராகுவாட் டைகுளோரைட் பூச்சிக்கொல்லிக்குத் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கோப்புப்படம்.

Published On :16 ஜூலை 2026, 2:25 am IST

மனிதா்கள், விலங்குகளுக்கு உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாராகுவாட் டைகுளோரைட் பூச்சிக்கொல்லிக்குத் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அந்தப் பூச்சிக்கொல்லியின் உற்பத்தி, இறக்குமதி, போக்குவரத்து, விநியோகம், விற்பனை, பயன்பாடு என அனைத்துக்கும் முழுமையாகத் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு உத்தரவில், அந்தப் பூச்சிக்கொல்லிக்குத் தடை விதிக்கும் முடிவு குறித்து 30 நாள்களுக்குள் தங்கள் ஆட்சேபங்கள் அல்லது யோசனைகளை சம்பந்தப்பட்டவா்கள் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1968-ஆம் ஆண்டின் பூச்சிக்கொல்லிகள் சட்டப் பிரிவு 5-இன் கீழ் அமைக்கப்பட்ட பதிவுக் குழுவின் பரிந்துரையைத் தொடா்ந்து, அந்தப் பூச்சிக்கொல்லிக்குத் தடை விதிக்கும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.