லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை அளித்திருப்பது பற்றி...

mohan bhagwat

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் - ANI

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:07 pm IST

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

நியூயார்க்கில் வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள ஹிந்துக்கள் அமைப்பின் நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், மத சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும், சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு சர்வதேச மத சுதந்திர ஆணையத்தின் தலைவர் ஆசிஃப் மஹ்மூத் பரிந்துரைத்துள்ளார்.

மேலும், சர்வதேச மத சுதந்திர ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர். ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய அமைப்புகள் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினரை இலக்கு வைத்துள்ளன.

ஆர்எஸ்எஸ் தலைவர் வருகையின் போது, அவருடன் அமெரிக்க அரசு தரப்பு சந்திப்புகளோ, தூதரக மரியாதையோ அளிக்கக் கூடாது.

மத சுதந்திர மீறல்களுக்குப் பொறுப்பான ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மீதும் தடைகளை விதிக்க வேண்டும்” என்று அமெரிக்க அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த மார்ச் மாதம் சர்வதேச மத சுதந்திர ஆணையம் அறிக்கைக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.

நம்பகத்தன்மையற்ற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவை எதிர்மறையாகச் சித்தரிக்க முயல்வதாக குற்றச்சாட்டை இந்திய அரசு முன்வைத்திருந்தது.

Story image

Summary

US commission recommends banning the RSS!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.