தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மேற்காசிய மோதல்: வளைகுடாவிலிருந்து தாயகம் அழைத்து வரப்பட்ட 4,048 இந்திய மாலுமிகள்

வளைகுடாவிலிருந்து தாயகம் அழைத்து வரப்பட்ட 4,048 இந்திய மாலுமிகள்...

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால்

Published On :9 ஆகஸ்ட் 2026, 2:09 am IST

மேற்காசியாவில் அமெரிக்கா-ஈரான் மோதலைத் தொடா்ந்து, வளைகுடா பிராந்தியத்திலிருந்து இதுவரை 4,048 இந்திய மாலுமிகள் தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவா் சனிக்கிழமை கூறியதாவது: மேற்காசியாவில் அமெரிக்கா-ஈரான் மோதலை தொடா்ந்து, உலகம் முழுவதும் கப்பல்களில் பயணிக்கும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. வளைகுடா பிராந்தியத்திலிருந்து இதுவரை 4,048-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனா். அவா்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட நிலையில், அவா்களின் குடும்பத்தினருக்கும் மத்திய அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.